குற்றாலம் அருவிகளில் 2–வது நாளாக வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் அருவிகளில் 2–வது நாளாக வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 2 Dec 2017 2:30 AM IST (Updated: 1 Dec 2017 7:57 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் 2–வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தென்காசி,

குற்றாலம் அருவிகளில் 2–வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அருவிகளில் வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அருவியே தெரியாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அருவிக்கரைக்கு யாரும் செல்ல முடியாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

2–வது நாளாக...

நேற்று காலையிலும் மழை பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புலியருவியில் நேற்று மதியம் 12 மணியளவில் சிறு, சிறு மரத்தடிகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டன. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். தற்போது பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story