தூத்துக்குடி மாவட்டத்தில் 154 மழை வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் 154 மழை வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2017 2:30 AM IST (Updated: 1 Dec 2017 8:14 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 154 மழை வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்று செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டத்தில் 154 மழை வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்று செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

அமைச்சர், கலெக்டர் ஆய்வு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதாலும், அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளை தாண்டி விழுந்து தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் ஆகியோர் நேற்று காலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–

நிவாரண முகாம்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு வசதியாக 154 இடங்களில் மழை வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழையில் 54 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

மழை வெள்ள சேதம் குறித்து 0461–246010 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அவற்றின் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Next Story