100 ஆண்டு பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது
சென்னை பாரிமுனையில் 100 ஆண்டு பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
ராயபுரம்,
சென்னை பாரிமுனை பிராட்வே நெடுஞ்சாலையில் திருவொற்றீஸ்வரர் அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு மாடி கட்டிடம் உள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தின் பின்பகுதி அம்பர்சன் தெருவில் உள்ளது. இந்த கட்டிடத்தின் முன்பகுதியில் 4 கடைகளும், பின்பகுதியில் 3 கடைகளும் அமைந்து உள்ளன.
இந்தநிலையில் நேற்று காலை இந்த கட்டிடத்தின் பின்பகுதியின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். அதிர்ஷ்டவசமாக கட்டிடம் இடிந்து விழுந்ததில் எந்தவித உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story