மோட்டார் சைக்கிள்– லாரி மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்– லாரி மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 2 Dec 2017 4:36 AM IST (Updated: 2 Dec 2017 4:36 AM IST)
t-max-icont-min-icon

வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள்– லாரி மோதல்; வாலிபர் பலி

வாலாஜாபாத்,

வாலாஜாபாத் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் தீபன்ராஜ் (வயது 22). இவர் குண்ணம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தீபன்ராஜ் நேற்று காலையில் வாரணவாசியில் இருந்து வாலாஜாபாத் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேவரியம்பாக்கத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த லாரி எதிர்பாரத விதமாக தீபன்ராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தீபன்ராஜ் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் தேவரியம்பாக்கத்திற்கு விரைந்து வந்து தீபன்ராஜ் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story