புன்னக்காயலில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
புன்னக்காயலில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நேற்று மதியம் பார்வையிட்டார்.
ஆறுமுகநேரி,
புன்னக்காயலில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நேற்று மதியம் பார்வையிட்டார். பின்னர் அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 25 கிலோ எடை கொண்ட 50 மூட்டை அரிசியை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, புன்னக்காயலில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. எனவே அங்கு ஆற்றுநீர் எளிதில் கடலுக்குள் எளிதில் செல்லும் வகையில், ஆண்டுதோறும் முறையாக தூர்வார வேண்டும். குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய தண்ணீரை அகற்றவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ் (திருச்செந்தூர்), ரவி (ஆழ்வார்திருநகரி கிழக்கு), திருச்செந்தூர் நகர செயலாளர் மந்திரமூர்த்தி, புன்னக்காயல் கிளை செயலாளர் சோபியா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story