நகை அடகுக்கடையில் 80 பவுன் கொள்ளை 2 பேரிடம் போலீசார் விசாரணை
பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் குமார் (வயது 60). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் தன் வீட்டில் ஒரு பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
பணகுடி,
பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் குமார் (வயது 60). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் தன் வீட்டில் ஒரு பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அந்த கடையில் மர்ம நபர்கள் 80 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் பதிவாகியிருந்த உருவங்களை வைத்து 2 பேரை பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், கொள்ளையை நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் விரைவில் கொள்ளையர்களை பிடித்து, அவர்களிடம் இருந்து நகையை மீட்போம் என்று கூறினார்.
Related Tags :
Next Story