சென்னை கொரட்டூரில் தோழி பேசாத விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை
ஒரு வாரமாக தோழி பேசாததால் விரக்தியில் மாற்றுத்திறனாளியான கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்தூர்,
சென்னை கொரட்டூர் அக்ரகாரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரதுரை(வயது 48). இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ரஷீலா(22). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், சென்னை மாநில கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
மாணவி ரஷீலா, கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் மிக அன்பாக பழகி வந்து உள்ளார். இதில் அவருடைய நெருங்கிய தோழி ஒருவர், கடந்த ஒரு வாரமாக ரஷீலாவுடன் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தோழி பேசாததால் மிகுந்த மனவேதனையில் இருந்த மாணவி ரஷீலா, விரக்தியில் தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மகளை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாணவி ரஷீலா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story