மும்பையில் தினமும் 5 சிறுவர்கள் கடத்தப்படுகின்றனர் அதிர்ச்சி தகவல்


மும்பையில் தினமும் 5 சிறுவர்கள் கடத்தப்படுகின்றனர் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2017 3:51 AM IST (Updated: 3 Dec 2017 3:51 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் தினமும் 5 சிறுவர்கள் கடத்தப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் நடந்த குற்றச்செயல்கள் குறித்த விவரங்களை ஆண்டு தோறும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு வருகிறது. இதன்படி சமீபத்தில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2016) நடந்த குற்றச்செயல்கள் குறித்த தகவலை வெளியிட்டது. இதில், கடந்த ஆண்டில் மட்டும் மராட்டியத்தில் 8 ஆயிரத்து 260 சிறுவர், சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவர்களில் 2 ஆயிரத்து 762 பேர் சிறுவர்கள். 5 ஆயிரத்து 498 பேர் சிறுமிகள்.

இதில், மும்பையில் மட்டும் 1,940 பேர் கடத்தப்பட்டுள்ளனர். அதாவது மும்பையில் தினமும் சராசரியாக 5 சிறுவர், சிறுமிகள் கடத்தப்படுகின்றனர். கடத்தப்பட்டவர்களில் 784 பேர் சிறுவர்கள். 1,156 பேர் சிறுமிகள்.

இதேபோல காணாமல் போனவர்களில் 566 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். 13 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். கொத்தடிமைகளாக நடத்துவதற்கும், பிச்சை எடுப்பதற்காகவும் சிறுவர், சிறுமிகள் அதிகளவில் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.



Next Story