கிருஷ்ணமராஜுகுப்பம், சத்தரை ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
கிருஷ்ணமராஜுகுப்பம், சத்தரை, மேல்மாளிகைபட்டு, பூவலை ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கிருஷ்ணமராஜுகுப்பம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பள்ளிப்பட்டு தாசில்தார் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். பள்ளிப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் வெண்ணிலா முன்னிலை வகித்தார். இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன்கார்டு, திருமண உதவித்தொகை, சாதி சான்றிதழ், ரேஷன்கார்டில் பெயர் திருத்தம், வீட்டுமனை பட்டா, வங்கி கடன், பட்டா மாற்றம், நலத்திட்ட உதவிகள் கோரி 30–க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இந்த முகாமிற்கு வருவாய் ஆய்வாளர் அஜய்பாபு, கிராம நிர்வாக அலுவலர் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் பரணிதரன், வட்ட வழங்கல் அலுவலர் உமா ஆகியோர் தலைமை தாங்கினர். வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கிராமநிர்வாக அலுவலர்கள் விஸ்வநாத், ரமேஷ், பூர்ணசெல்வி, பரணிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 136 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களில் 45 மனுக்களுக்கு அங்கேயே தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள மேல்மாளிகைபட்டு ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. சிறப்பு தாசில்தார் லதா தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர்கள் ரவி, காயத்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் மணி வரவேற்றார். தாசில்தார் கிருபாஉஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 26 பேர் தாசில்தார் கிருபாஉஷாவிடம் மனுக்கள் கொடுத்தனர்.
மொத்த மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வட்ட வழங்கல் அலுவலர் பிரித்தி, கிராம உதவியாளர் முனிவேல் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலை ஊராட்சிக்கு உட்பட்ட பூவலை கிராமத்தில் அம்மா திட்ட முகாம் தாசில்தார் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லலிதா, வருவாய் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முதியோர் மற்றும் பிற உதவித்தொகை தொடர்பாக 55 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 2 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு அதற்கான நலத்திட்ட உதவி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக கவுரீஸ்வரி வரவேற்றார். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.