உய்யகொண்டான் ஏரி நிரம்பியதால் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது
பலத்த மழை காரணமாக உய்யகொண்டான் ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது. மேலும் ஜெயங்கொண்டம் பகுதியில் 14 வீடுகள் இடிந்து விழுந்தன.
வாரியங்காவல்,
அரியலூர் மாவட்டத்திலும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தின் மையப்பகுதியில் உள்ளது உய்யகொண்டான் ஏரி. இந்த ஏரிக்கு ஜெயங்கொண்டத்தில் உள்ள 3 ஏரிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. கடந்த 3 நாட்களாக ஜெயங்கொண்டத்தில் கனமழை பெய்ததால் உய்யகொண்டான் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஏரி முழுவதும் நிரம்பி தண்ணீர் வெளியேறியது. இதனால் ஜெயங் கொண்டம்-சிதம்பரம் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. அப்பகுதியில் உள்ள திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் வீடுகள், கடைகளை வெள்ளநீர் சூழ்ந்தது. வீடுகள், கடைகளுக்குள் புகுந்த வெள்ள நீரை அப்பகுதி மக்கள் பாத்திரங்கள் மூலம் இரைத்து வெளியேற்றினார்கள். இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story