உடலும்.. மனதும்..
மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய இரு துறைகளில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார், ஸ்வேதா தேவராஜ். பெங்களூ ருவை சேர்ந்த இவர் வாஸ்குலார் ரேடியோலாஜிஸ்ட் மருத்துவ நிபுணர்.
மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய இரு துறைகளில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார், ஸ்வேதா தேவராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் வாஸ்குலார் ரேடியோலாஜிஸ்ட் மருத்துவ நிபுணர். மாரத்தான் வீராங்கனையும் கூட. தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு மாணவ-மாணவி களுக்கு உடற்பயிற்சி சொல்லிக்கொடுக்கும் இவர், அதன் பிறகு மருத்துவமனைக்கு சென்று தன் பணியை செய்கிறார்.
ஒரே நேரத்தில் இரண்டு பணிகளை செய்வது எளிதான விஷயமல்ல, என்று ஸ்வேதா சொல்கிறார். ‘‘நான் நேர மேலாண்மையை சரிவர பின்பற்றுகிறேன். அதற்காக ஒவ்வொரு நாளும் அட்டவணை போட்டு அதன்படி செயல்படுகிறேன். நான் நீண்டகாலமாகவே உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். அதனால்தான் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடிகிறது’’ என்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட ஸ்வேதா 21 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் 42 நிமிடங்களில் கடந்திருக்கிறார். டென்னிஸ் விளையாட்டிலும் ஆர்வமாக ஈடுபடுகிறார். ஒரே விளையாட்டோடு நிறுத்திக்கொள்ளாமல் மாறுபட்ட விளையாட்டுகளை விளையாடுவது உடல் நலனுக்கு மட்டுமல்ல, மனநலனுக்கும் நன்மை சேர்க்கும் என்கிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உடற்பயிற்சியுடன் உணவு பழக்க வழக்கங்களிலும் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார். ‘‘நான் பாலீஸ் செய்யப்பட்ட அரிசி, பால் பொருட்கள், சர்க்கரை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. பெரும்பாலும் காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள், பழங்கள் போன்றவற்றைதான் உட்கொள்கிறேன்’’ என்கிறார்.
உடற்பயிற்சி செய்யும்போது புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். பெண்கள் உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்ட வேண்டும் என்ற எண்ணமே அதற்கு காரணம் என்கிறார்.
‘‘பெண்கள் தங்கள் உடல் அமைப்பை ஒருபோதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. ஒவ்வொரு மனித உடலும் ஒரு தனித்துவமான கட்டமைப்பை கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான, கட்டுக்கோப்பான உடலை பெறுவதற்கு உடற்பயிற்சியே சரியான தீர்வு. அதனை முறையாக செய்துவர வேண்டும். பயிற்சியின் மூலம் உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றம் மனநலனிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்கிறார்.

Related Tags :
Next Story