சென்னை ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது
சென்னை ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை காசிமேடு ஒய்.எம்.சி.ஏ. குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 28). இவருக்கு மலர் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கோஷ்டியில் ரவீந்திரன் இருந்தார். இவர் மீது வண்ணாரப்பேட்டை போலீசில் 2 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று தற்போது ரவுடி ரவீந்திரன் வெளியே வந்தார்.
இதனால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சி 2 வாரத்துக்கு முன்பு திருப்போரூரில் குடும்பத்துடன் ஒரு வாடகை வீட்டில் ரவீந்திரன் குடியேறினார். அங்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி இரவு ரவீந்திரன், தன்னுடைய மனைவி மலருடன் திருப்போரூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் ரவீந்திரனை பின் தொடர்ந்து வந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தவுடன் ரவீந்திரனை வழி மறித்து 6 பேரும் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், தாழம்பூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர் ரவீந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாம்பாக்கம் அருகே பதுங்கி இருந்த 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மாம்பாக்கத்தை அடுத்த மேலக்கோட்டையூரை சேர்ந்த சந்தோஷ் (27), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கமருதீன் (27), தண்டையார்பேட்டையை சேர்ந்த அப்துல் கரீம் (27), குமரேசன் (29) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜராக வந்த கல்வெட்டு ரவி தரப்பை சேர்ந்த ரவுடி விஜயகுமார் கொலைக்கு பழிவாங்க ரவீந்திரனை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
விஜயகுமார் கொலைக்கு ரவிந்திரனும், அவருடைய தம்பி தேசப்பன் இருவரும் தான் காரணம் என்று கல்வெட்டு ரவி தரப்பு நினைத்தனர். எனவே இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டினர். அவர்கள் திருப்போரூர் பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்து ரவீந்திரனை கொலை செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதானவர்களிடம் இருந்து 4 கத்திகளும், கொலையான ரவுடி ரவீந்திரன் வீட்டில் இருந்து ரத்தக்கறை படிந்த கத்தி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 5 பேரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story