இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வேண்டும்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களையும், படகையும் மீட்டுத்தரும்படி காரைக்கால்மேடு பஞ்சாயத்தார், முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரது மகன் ராஜ்குமார் உள்ளிட்ட 10 மீனவர்கள் கடந்த 30-ந் தேதி இரவு விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். ‘ஒகி’ புயல் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டதால் கடந்த 1-ந் தேதி இரவு கோடியக்கரை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால்மேடு மீனவர்களின் படகு ஒன்று அலைகளில் சிக்கி இலங்கை பருத்திதுறை கடற்பகுதிக்கு சென்று விட்டது. அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த மீனவர்களையும், விசைப்படகையும் சிறைபிடித்தனர்.
மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கை கடற்பகுதிக்கு செல்லவில்லை, புயல் காரணமாக விசைப்படகு அலைகளில் சிக்கியதால் இலங்கை கடற்பகுதிக்குள் செல்ல நேரிட்டதாகவும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர் களது விசைப்படகையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்கால்மேடு மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் நேற்று புதுச்சேரி சென்று முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், நாளை (அதாவது இன்று) புதுடெல்லி செல்ல உள்ளதாகவும், அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து இதுதொடர்பாக பேசி மீனவர்களை மீட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும் உறுதி அளித்தார். இந்தசந்திப்பின்போது காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பாஸ்கரன், துணைத் தலைவர் நாகரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story