வாலாஜாபாத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்


வாலாஜாபாத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2017 4:09 AM IST (Updated: 4 Dec 2017 4:09 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் வாலாஜாபாத்தில் நடந்தது.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் வாலாஜாபாத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் முதல் ஆண்டு நினைவஞ்சலியை எவ்வாறு அனுசரிக்க வேண்டும், சென்னையில் நடைபெறும் நினைவஞ்சலி மவுன ஊர்வலத்தில் அ.தி.மு.க.வினர் கலந்து கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஆலோசணை வழங்கினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய பிரசார வழிமுறைகள் குறித்து ஆலோசணைகளையும் அமைச்சர் வழங்கினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் மைதிலி திருநாவுக்கரசு, சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. மதனந்தபுரம் பழனி, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story