பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Dec 2017 4:25 AM IST (Updated: 4 Dec 2017 4:24 AM IST)
t-max-icont-min-icon

பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு 15–க்கும் மேற்பட்ட நகர்பகுதிகள் உள்ளது. மேலும் காக்களூர் தொழிற்பேட்டையும் ஆவின் பால் பண்ணையும் உள்ளது. இந்த பகுதி மக்களுக்காக கடந்த 2010–11 நிதியாண்டில் காக்களூர் ஆஞ்சநேயபுரத்தில் ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் புறக்காவல் நிலையம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட இந்த புறக்காவல் நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் காக்களூர் பகுதியில் நடக்கும் குற்றச்சம்பவங்களை பொதுமக்கள் திருவள்ளூர் தாலுகா போலீசில் அளித்து வருகின்றனர்.

எனவே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் பூட்டியே இருக்கும் இந்த புறக்காவல் நிலையத்தை காவல் துறையினர் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் திறந்து வைத்து அதில் தினந்தோறும் காவலரை நியமித்து பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story