பொன்னேரியில் வங்கி ஏ.டி.எம்.மில் கிழிந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள்


பொன்னேரியில் வங்கி ஏ.டி.எம்.மில் கிழிந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள்
x
தினத்தந்தி 4 Dec 2017 4:31 AM IST (Updated: 4 Dec 2017 4:31 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரியில் வங்கி ஏ.டி.எம்.மில் கிழிந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பொன்னேரி,

பொன்னேரியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்களின் நலனுக்காக வங்கியின் வெளிபுறத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வாடிக்கையாளர்கள் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தனர்.

அப்போது ஒருவருக்கு கிழிந்த ரூ.2 ஆயிரம் நோட்டு வரிசை எண் மாற்றி ஒட்டப்பட்ட நிலையில் கிடைத்தது. மற்றொரு வாடிக்கையாளருக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகள் 2 கிழிந்த நிலையில் வரிசை எண் மாற்றி ஒட்டப்பட்ட நிலையில் கிடைத்தது.

இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வங்கி விடுமுறை என்பதால் யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாமல் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர்.. பின்னர் ஏ.டி.எம். காவலாளியிடம் இது குறித்து அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வங்கி ஏ.டி.எம்.மில் கிழிந்த நோட்டுகள் இருப்பதற்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.


Next Story