திருமணம் செய்து வைப்பதாக கூறி ஆதரவற்ற பெண்களை அழைத்து சென்று ராஜஸ்தானில் விற்றவர் கைது
திருமணம் செய்து வைப்பதாக கூறி ஆதரவற்ற பெண்களை அழைத்து சென்று ராஜஸ்தானில் விற்பனை செய்த மராட்டியத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
உப்பள்ளி,
மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் அக்கிவாடி கிராமத்தை சேர்ந்தவர் அபயகுமார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா அன்னிகேரியில் வீடு எடுத்து தங்கி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அன்னிகேரி பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற இளம்பெண்களிடம், உங்களுக்கு நான் திருமணம் செய்து வைக்கிறேன் என்று ஆசைவார்த்தைகள் கூறி, இளம்பெண்களை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்று அவர் விற்பனை செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அபயகுமார், இளம்பெண்களை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்று விற்பனை செய்வதாக தார்வார் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி குகனூருக்கு புகார்கள் சென்றன.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் குகனூர், நவலகுந்து போலீசாருடன் சேர்ந்து அன்னிகேரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது ஆதரவற்ற இளம்பெண்களிடம் திருமணம் செய்து வைப்பதாக கூறி, அவர்களை அழைத்து சென்று அபயகுமார் ராஜஸ்தானில் விற்பனை செய்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து அபயகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் இருந்த 2 இளம்பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நவலகுந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story