முன் விரோதம் காரணமாக மீன் வியாபாரிகள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது


முன் விரோதம் காரணமாக மீன் வியாபாரிகள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2017 2:30 AM IST (Updated: 5 Dec 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதம் காரணமாக மீன் வியாபாரிகள் 2 பேரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். அவருடைய கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோட்டயம்,

கோட்டயத்தை அடுத்துள்ள சிங்கவனம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் லிபின்தாமஸ் (வயது 28). டினுஜேக்கப் (25). இவர்கள் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த உம்மச்சன் (49) என்பவருக்கும் மீன் வியாபாரம் செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று லிபின்தாமசும், டினுஜேக்கப்பும் சிங்கவனம் பகுதியில் உள்ள ஒரு பாருக்கு மது குடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த உம்மச்சன், 2 பேரிடமும் தகராறில் ஈடுபட்டார்.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த உம்மச்சன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து லிபின்தாமசையும், டினுஜேக்கப்பையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து உம்மச்சன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் தப்பி சென்றனர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த லிபின்தாமசும், டினுஜேக்கப்பும் உயிருக்கு போராடினர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிங்கவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உம்மச்சனை கைது செய்தனர். மேலும் அவருடையை கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story