திருப்பூரில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2017 3:00 AM IST (Updated: 5 Dec 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

திராவிடர் விடுதலை கழகத்தின் திருப்பூர் கிளை சார்பில் மாநகராட்சி அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர்,

திராவிடர் விடுதலை கழகத்தின் திருப்பூர் கிளை சார்பில் மாநகராட்சி அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பொருளாளர் துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முகில்ராசு, மாநகர செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர் முத்து, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக வேலைவாய்ப்புகளை வடநாட்டுக்கு தாரை வார்க்கும் தமிழ்நாடு தேர்வாணையத்தை கண்டித்தும், அறிவுப்புகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.


Next Story