50 குழந்தைகளுக்கு கல்லீரல் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை நடத்தி அப்பல்லோ ஆஸ்பத்திரி சாதனை படைத்துள்ளது என்று அப்பல்லோ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பிரீத்தா ரெட்டி கூறினார்.
சென்னை,
சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் குழந்தைகளுக்கு என தனி ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டது. ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டு இதுவரை 50 குழந்தைகளுக்கு கல்லீரல் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
முதல் குழந்தையின் பெயர் மமோன். ஓமன் நாட்டைச்சேர்ந்த அந்த குழந்தை பிறந்து 9 மாதங்களே ஆகிறது. அந்த குழந்தைக்கு பைலரி ஆர்டேசியா என்ற கல்லீரல் குறைபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை அப்பல்லோ குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் தந்தை கல்லீரலை தானமாக வழங்கினார். இதையொட்டி கல்லீரலை தானமாக தந்த தந்தைக்கு முதலில் அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் சிறுவன் மமோனுடைய நோயுடைய கல்லீரல் அகற்றப்பட்டது. பின்னர் தானமாக பெற்ற கல்லீரல் அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. அவன் நன்றாக இருக்கிறான்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 50-வது குழந்தையின் பெயர் பிரிஷா (வயது 3). மலேசியாவை சேர்ந்த இந்த குழந்தையும் கல்லீரல் நோயால் சிரமப்பட்டு வந்தது. அப்பல்லோ குழந்தைகளுக்கான ஆஸ்பத்திரியில் அவளது தாய் தானமாக கொடுத்த கல்லீரல் அந்த குழந்தைக்கு பொருத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரியின் குழும நிர்வாக இயக்குனர் பிரீத்தா ரெட்டி கூறியதாவது:-
குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை என்றால் பெரிய ஆட் களை விட மிக சிரமம். அதுவும் மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகக்கடினம். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனைத்து நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மருத்துவ கருவிகள் உள்ளன. அதேநேரத்தில் மருத்துவ குழுவும் சிறப்பான சேவை செய்துள்ளன. 50 குழந்தைகளுக்கு உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவக்குழுவினரை பாராட்டுகிறேன்.
இவ்வாறு பிரீத்தா ரெட்டி தெரிவித்தார்.
அப்பல்லோ குழந்தைகள் ஆஸ்பத்திரியில் உறுப்புகள் மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்ட பிரிஷா(3). குஜராத்தை சேர்ந்த தாரணி (6), கும்பகோணத்தை சேர்ந்த கோபிநாத் (8), கன்னியாகுமரியை சேர்ந்த லிஜி (14) ஆகியோரை அறுவைசிகிச்சை செய்த டாக்டர் ஆனந்த் கக்கார் நேற்று மீண்டும் பரிசோதனை செய்தார். அவர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என்று அந்த டாக்டர் தெரிவித்தார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை டாக்டர்கள் ஆனந்த் ராமமூர்த்தி, மனீஸ்வர்மா, மகேஷ் கோபஷெட்டி, விஸ்வநாதன், வசந்தா ரூபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story