பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Dec 2017 5:15 AM IST (Updated: 5 Dec 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்பேடு,

சென்னை நெற்குன்றம், முனியப்பா நகர் 1-வது பிரதான சாலையில் வசிப்பவர். அருள் ஆனந்த். இவரது மகள் ஜெனிபர் (வயது 17). கோடம்பாக்கம் புலியூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் சரியாக படிக்கவில்லை, ஒழுங்காகப்படி என ஜெனிபரை, அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஜெனிபர், மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோயம்பேடு போலீசார் விரைந்து சென்று ஜெனிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story