சென்னை தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது


சென்னை தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2017 3:45 AM IST (Updated: 5 Dec 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே சென்னை தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுராந்தகம்,

சென்னை கோயம்பேட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் ராமச்சந்திரன்(வயது 39). இவருக்கும், கோயம்பேட்டில் மீன் வியாபாரம் செய்து வந்த அலமேலு(40) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக மதுராந்தகம் அடுத்த சிறுநல்லூரில் கணவன்மனைவி போல் சேர்ந்து வாழ்ந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். அலமேலுவுக்கும் ஏற்கனவே திருமணமாகி மாரிமுத்து என்ற கணவரும், 2 மகன்களும் உள்ளனர். மாரிமுத்துவுக்கு அலமேலு 2வது மனைவி. அலமேலுவுக்கு சொந்தமான சென்னையில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு, மாரிமுத்துவின் முதல் மனைவியின் மகன் மணிகண்டன் (31) தொடர்ந்து அலமேலுவுக்கு தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு ராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார்.

கடந்த 1–ந்தேதி அலமேலு ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த மணிகண்டன், மீண்டும் சொத்து தொடர்பாக ராமச்சந்திரனுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், ராமச்சந்திரன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார். இதுபற்றி சித்தாமூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை பிடித்து விசாரித்து வந்தார்.

அதில், சொத்து தகராறில் ராமச்சந்திரனை கொன்றதாக ஒப்புக்கொண்டதால் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story