மாவட்ட செய்திகள்

கீழக்குடிக்காடு தடுப்பணையை பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு + "||" + Perambalur Prevention Collector survey

கீழக்குடிக்காடு தடுப்பணையை பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு

கீழக்குடிக்காடு தடுப்பணையை பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு
கீழக்குடிக்காடு தடுப்பணையை பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு
மங்களமேடு,

வடகிழக்கு பருவமழையின் காரணமாக வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கீழக்குடிக்காடு தடுப்பணைக்கு, தொழுதூர் அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ள நீர் வந்தது. தடுப்பணையில் இருந்து அத்தியூர் ஏரிக்கு செல்லும் வரத்து வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாமல் புதர்கள் மண்டி இருந்ததால் வெள்ள நீர் வாய்க்காலின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு மீண்டும் வெள்ளாற்றுக்கே சென்றது. இதனால் லெப்பைக்குடிக்காடு, பென்னகோணம், ஓகளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வரத்து வாய்க்காலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு பொதுப்பணித்துறையின் முலமாக கீழக்குடிக்காடு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையை சுற்றியுள்ள கரைப்பகுதிகளை பலப்படுத்தும் வகையில் மணல் முட்டைகள் அடுக்கப்பட்டு வருகிறது. இந்தப்பணிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் சென்று ஆய்வு செய்தார்.மேலும் மழைக்காலங்களில் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் மக்களை அருகில் உள்ள பள்ளிகளிலோ, சமுதாய கூடங்களிலே தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், மழை மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் கண்காணிக்கவும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். ஆய்வின் போது திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், குன்னம் வட்டாட்சியர் தமிழரசன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. தனியார் நிறுவனத்தில் ராணுவத்துக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு துறையினர் ஆய்வு
துவாக்குடி அருகே தனியார் நிறுவனத்தில் ராணுவத்துக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.
2. குவாகம் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
குவாகம் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு உள்ள பொதுமக்களை அழைத்து போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தினை நடத்தினார்.
3. அரசு பழத்தோட்டத்தில் மாட்டு வண்டியில் பயணம் செய்த கலெக்டர் 2 கி.மீ. தூரம் அவரே ஓட்டிச் சென்று ஆய்வு செய்தார்
கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் மாட்டு வண்டியில் பயணம் செய்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். 2 கி.மீ. தூரம் அவரே மாட்டு வண்டியை ஓட்டினார்.
4. கஜா புயல் பாதிப்பால் விவசாயிகள் 25 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டனர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
கஜா புயல் பாதிப்பினால் விவசாயிகள் 25 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
5. புயல் பாதித்த 7 மாவட்டங்களில் தொற்று நோயினால் யாரும் பாதிக்கப்படவில்லை அமைச்சர் பேட்டி
புயல் பாதித்த 7 மாவட்டங்களில் இதுவரை தொற்று நோயினால் யாரும் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.