ஐகோர்ட்டு தடையால் பாதிப்பு: மணல் அள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
ஐகோர்ட்டு தடையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மணல் அள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பு தலைவர் ராஜூ தலைமையில் நிர்வாகிகள் பலர் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கோவிந்தராஜிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-
தமிழக அரசின் கொள்கை முடிவின்படி அரசு மணல் குவாரியில் ஆன்-லைன் மூலம் மணல் எடுத்து செல்லும் திட்டம் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அனைவருக்கும் சமமான முறையில் நடந்து கொண்டு இருந்தது. சில நபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதன் காரணமாக ஐகோர்ட்டு தடைவிதித்துள்ளது. இதனால் பல ஆயிரம் லாரி உரிமையாளர்களும், டிரைவர்களும், கட்டுமான தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே மக்கள் நலன் கருதி உடனடியாக ஐகோர்ட்டை அணுகி அரசு ஆலோசனை செய்து முறைப்படி மணல் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு கட்டிடம் கட்டுவதற்கும், கட்டிய கட்டிடத்தை முடிப் பதற்கும் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்ற கலெக்டர் அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். இது குறித்து ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், “மதுரை ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை அகற்ற அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆன்-லைனில் முறைப்படி மணல் அள்ளுவதை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Related Tags :
Next Story