ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்: அ.தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்


ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்: அ.தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்
x
தினத்தந்தி 6 Dec 2017 4:15 AM IST (Updated: 6 Dec 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கும்பகோணத்தில் அ.தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் சென்றனர்.

கும்பகோணம்,

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கும்பகோணத்தில் நேற்று அ.தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் நடை பெற்றது. கும்பகோணம் மகாமக குளம் மேல்கரையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. சாரங்கபாணி கோவில் சன்னதி தெருவில் நிறைவடைந்தது. அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி, மரியாதை செலுத்தினர். பின்னர் மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

அமைதி ஊர்வலத்துக்கு கும்பகோணம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராம.ராமநாதன் தலைமை தாங்கினார். கும்பகோணம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன், சோழபுரம் நகர செயலாளர் ஆசாத்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் செந்தில், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் செல்வராஜ், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கைத்தறி பிரிவு செயலாளர் லெனின், நகர துணை செயலாளர் ஷாஜகான், நகர பொருளாளர் அப்துல் சமது, பேரவை செயலாளர் அயூப்கான், முன்னாள் ஒன்றிய தலைவர் கோவி.மகாலிங்கம், பேரவை மாவட்ட பொருளாளர் சின்னையன் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story