புது மாப்பிள்ளையை வெட்டிக் கொல்ல முயற்சி: 4 பேருக்கு வலைவீச்சு
புதுவை முதலியார்பேட்டை ராமலிங்கபுரம் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மரப்பாலத்தில் உள்ள ஒரு ஐஸ் கடை முன்பு மகாலிங்கம் நி
புதுச்சேரி,
புதுவை முதலியார்பேட்டை ராமலிங்கபுரம் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மரப்பாலத்தில் உள்ள ஒரு ஐஸ் கடை முன்பு மகாலிங்கம் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென்று மகாலிங்கத்தை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்ட முயன்றது. முகத்தில் துணியால் மூடிக் கொண்டு வந்த அந்த கும்பல் தாக்குதல் நடத்த முயன்றதைப் பார்த்ததும் மகாலிங்கம் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அவரை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் விடாமல் துரத்திச் சென்று ஓட ஓட விரட்டி வெட்டினார்கள்.
இதில் மகாலிங்கத்துக்கு தலை, கை உள்ளிட்ட உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அங்கு ஆள் நடமாட்டம் இருந்தால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. பலத்த காயம் அடைந்த அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை வெட்டியது ஏன்? அவரை வெட்டிய கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் அதே பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகரின் மகன் அருள் உள்பட 4 பேர் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.