விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும் வரை ‘போராட்ட களத்தில் இருந்து நகர மாட்டேன்’ யஷ்வந்த் சின்கா திட்டவட்டம்


விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும் வரை ‘போராட்ட களத்தில் இருந்து நகர மாட்டேன்’ யஷ்வந்த் சின்கா திட்டவட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2017 3:00 AM IST (Updated: 6 Dec 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

‘‘விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போராட்ட களத்தை விட்டு நகர மாட்டேன்’’ என்று பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தெரிவித்தார்.

அகோலா,

‘‘விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போராட்ட களத்தை விட்டு நகர மாட்டேன்’’ என்று பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தெரிவித்தார்.

யஷ்வந்த் சின்கா

விவசாய பம்பு செட்டுகளுக்கு தடையில்லா மின்சாரம், பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம், தங்கநகை அடமான தள்ளுபடி திட்டத்தின் கடுமையான நிபந்தனைகளை தளர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகளுக்கு ஆதரவாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா நேற்று முன்தினம் அகோலா கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, யஷ்வந்த் சின்கா மற்றும் 250–க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் பிடித்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். பின்னர், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அகோலா போலீஸ் மைதானத்தில் அமர்ந்து 80 வயது யஷ்வந்த் சின்கா இரவு முழுவதும், பனியையும் பொருட்படுத்தாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால், பா.ஜனதா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, நிருபர்களை சந்தித்த யஷ்வந்த் சின்கா, ‘‘விவசாயிகளின் நிலையை அரசும், மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை, போராட்ட களத்தில் இருந்து ஒரு அடி கூட நகர மாட்டேன்’’ என்றார்.

சரத்பவாருடன் பேச்சு?

எனினும், விவசாயிகள் எழுப்பிய பெரும்பாலான கோரிகைகள் ஏற்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. முன்னதாக, விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருடன் யஷ்வந்த் சின்கா செல்போனில் பேசியதாக தகவல் வெளியானது.


Next Story