கடற்படையில் வேலை


கடற்படையில் வேலை
x
தினத்தந்தி 6 Dec 2017 11:36 AM IST (Updated: 6 Dec 2017 11:36 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கடற்படையின் மேற்கு கமாண்டிங் மண்டலம் மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.

ந்திய கடற்படையின் மேற்கு கமாண்டிங் மண்டலம் மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. தற்போது இந்த மண்டலத்தில், சார்ஜ்மேன் பணிகளுக்கு 99 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெக்கானிக் பிரிவில் 58 இடங்களும், ஆயுதக்கிடங்கு பிரிவில் 41 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கும் இந்த தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய அறிவியல் பாடங்களில் பட்டப்படிப்பு படித்தவர்கள் அல்லது எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், புரொடக்சன் போன்ற டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 21 நாட்களில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது பற்றிய அறிவிப்பு டிசம்பர் 2-8 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அறிவிப்பின்படி மும்பை மேற்கு கடற்படை கமாண்டிங் மண்டலத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் , நூலக உதவியாளர், ரேடியோகிராபர், டிரைவர், உள்ளிட்ட பணிகளுக்கு 69 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள், 10-ம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்கள் ஆகியோருக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்
www.hqwncrecritment.com
மற்றும் indiannavy.nic.in ஆகிய இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Next Story