வெளிநாட்டில் முந்திரி பருப்பு வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் கைது
வெளிநாட்டில் முந்திரி பருப்பு வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வரதராஜன்(வயது 38). முந்திரி பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், எனக்கு கடந்த 2016-ம் ஆண்டு கோவை மாவட்டம் கே.கே.புதூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் “பேஸ்புக்“ மூலம் நண்பர் ஆனார்.
அவர், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புதுறையை சேர்ந்த ஒரு தனியார் மளிகை சாமான்கள் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் (41) என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந் தேதி வியாபார ஒப்பந்தம் மூலமாக இந்தோனேசியாவில் இருந்து முந்திரி பருப்புகளை இறக்குமதி செய்து தருவதாக கூறினார். இதற்காக நான் முதல் தவணையாக ரூ.30 லட்சத்தை சேலத்தில் உள்ள ஒரு வங்கியின் மூலம் விஜயகுமாரின் வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்தேன்.
இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு ஒப்பந்தத்தில் தான்சானியா நாட்டில் இருந்து முந்திரிபருப்பு இறக்குமதி செய்து தருவதாக விஜயகுமார் தெரிவித்தார். இதையடுத்து 2-வது தவணையாக ரூ.70 லட்சத்தை அதே போல் விஜயகுமாரின் வங்கி கணக்கில் பணப்பரிமாற்றம் செய்தேன். மொத்தமாக வியாபாரம் தொடர்பாக அவரிடம் ரூ.1 கோடி வங்கி மூலம் பணப்பரிமாற்றம் செய்தேன். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட பின்பு அவர் சொன்னபடி முந்திரி பருப்பை இறக்குமதி செய்து தரவில்லை.
இதனால் விஜயகுமாரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். எனவே விஜயகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்பாதுரை விசாரணை நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று விஜயகுமார், அவருடைய தாயார் அபூர்வா, மனைவி சங்கீதா, சகோதரி சுஜாதா, இவருடைய கணவர் ரமேஷ் மற்றும் சீனிவாசன், குமார் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜயகுமாரை மட்டும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story