அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் அமைக்க வலியுறுத்தி சென்னையில், இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் அமைக்க வலியுறுத்தி சென்னையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை,
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் அமைக்க மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச மாநில அரசு ஆகியவை உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் சென்னை புரசைவாக்கம் டவுட்டன் மேம்பாலத்தின் கீழே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய சென்னை மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச அரசு உடனடியாக சட்டம் இயற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
இதேபோல கோயம்பேட்டில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தென் சென்னை மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமையிலும், திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரில் வட சென்னை மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையிலும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, ராமர் கோவில் கட்டவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பதாகைகளையும் அவர்கள் கையில் வைத்திருந்தனர்.
இதேபோல பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், ராயபுரம், வில்லிவாக்கம், அண்ணாநகர், திரு.வி.க.நகர்., திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளிலும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் 12 இடங்களில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story