காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் கருவிகள்
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் செய்வதற்கான 2 கருவிகளை அமைக்க நிதி வழங்கப்பட்டது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் செய்வதற்கான 2 கருவிகளை அமைக்க ரூ.14 லட்சம் மாவட்ட கலெக்டரின் விருப்ப உரிமை நிதியில் இருந்து வழங்கப்பட்டது. அந்த 2 டயாலிசிஸ் கருவிகளும் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நடந்தது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா இந்த டயாலிசிஸ் கருவிகளை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்:-
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 2 டயாலிசிஸ் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதிக எண்ணிக்கையில் வரும் நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் மேலும் 2 கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் சசிகலா, டாக்டர் கல்பனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story