தனியார் மருத்துவமனை சட்ட மசோதாவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் மந்திரி ரமேஷ்குமார் பேச்சு
தனியார் மருத்துவமனை சட்ட மசோதாவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்று மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.
கோலார் தங்கவயல்,
தனியார் மருத்துவமனை சட்ட மசோதாவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்று மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.
கருத்தரங்கம்
கோலாரில் உள்ள பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகத்தில் ‘மக்களின் ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில சுகாதார துறை மந்திரியுமான ரமேஷ்குமார் கலந்துகொண்டு கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அங்கு வைக்கப்பட்டிருந்த அவருடைய படத்திற்கு மந்திரி ரமேஷ்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அந்த கருத்தரங்கத்தில் அவர் பேசியதாவது:–
ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேர்...கர்நாடக மாநிலம் முழுவதும் 2,353 சுகாதார மையங்களும், 206 சமுதாய சுகாதார மையங்களும் உள்ளன. இதுமட்டுமின்றி 176 தாலுகாக்களிலும், 31 மாவட்டங்களிலும் அரசு ஆஸ்பத்திரிகளும் செயல்பட்டு வருகின்றன. கர்நாடகத்தில் இருந்து மட்டும் ஆண்டுதோறும் 4,000 பேர் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் தங்கள் படிப்பை முடித்துவிட்டு அரசு பணிக்கு வர வேண்டும். கடந்த மாதம் (நவம்பர்) கர்நாடகத்தில் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த சட்டசபையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏழை–நடுத்தர மக்களின் நலனுக்காகவே இந்த திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரவேற்பு இருக்கும்தனியார் மருத்துவமனை டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த சட்ட மசோதாவில் ஒருசில திருத்தங்கள் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா கூடிய விரைவில் அமலுக்கு வரும். அந்த மசோதா அமலுக்கு வந்த பிறகு அது நல்ல திட்டமா?, கெட்ட திட்டமா? என்று மக்களுக்கே தெரியவரும். அந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.
இன்னும் ஒரு மாதத்தில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகள் பொருத்தப்படும். அதேபோல, அனைத்து தாலுகா அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிறுநீரக மையம் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.