சிவகங்கை ரெயில் நிலையத்தில் முற்றுகையிட முயன்ற 98 பேர் கைது


சிவகங்கை ரெயில் நிலையத்தில் முற்றுகையிட முயன்ற 98 பேர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2017 4:15 AM IST (Updated: 7 Dec 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை ரெயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த 98 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை,

பாபர்மசூதி இடிப்பு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதேபோல் ரெயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்த பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ரெயில் பாதைகளில் மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை செய்யப்பட்டது. இதுதவிர பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் கோவில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் சிவகங்கை மாவட்ட சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமதுஹாலித் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜலால்தீன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அப்துல்மாலிக் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் முகைதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைச்செயலாளர் ஆல்பர்ட் உள்பட பலர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.

இதற்கிடையில் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பாபர்மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும், மசூதியை இடித்தவர்களுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும், இடம் தொடர்பான வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை ரெயில் நிலையத்தில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று அரண்மனைவாசலில் இருந்து ஊர்வலமாக சென்று ரெயில் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த நகர் போலீசார், கட்சியின் மாவட்ட செயலாளர் காஜாமுகைதீன், மாநில துணைச் செயலாளர் முகமதுசைபுல்லாக், மாநில வர்த்தகர் அணி செயலாளர் சாகுல்ஹமீதுசேட் உள்பட 98 பேரை கைது செய்தனர்.


Next Story