நினைவு நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை,
டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தி.மு.க. சார்பில் ரகுபதி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதைப்போல காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதைப்போல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் மாவட்ட செயலாளர் விடுதலைக்கணல் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதேபோல திராவிடர் கழகம், தே.மு.தி.க., பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு காட்டு நாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Related Tags :
Next Story