மாதம் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஞானமோகன், ஒன்றிய செயலாளர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்ய வேண்டும். கேரளாவை போல விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை ஏற்படுத்த வேண்டும். வேலை இழப்பால் பாதிக்கப்பட்டு உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்கத்தின் ஒன்றிய தலைவர் காமராஜ், நகர தலைவர் வாசுதேவன், நகர செயலாளர் பக்கிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்ப்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ராஜாங்கம், நிர்வாகிகள் கார்த்திகேயன், சிவானந்தம், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வீரமணி, நகர செயலாளர் கலைச்செல்வன், ஒன்றிய துணைச்செயலாளர் ராகவன், நகர துணை செயலாளர் தனிக்கொடி, மாட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் நாகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக அம்பேத்கர் சிலையில் இருந்து புறப்பட்டு பஸ் நிலையம் வழியாக தாசில்தார் அலுவலகம் வந்தனர்.

Related Tags :
Next Story