கருப்பு சட்டை அணிந்து முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
பாபர்மசூதி இடிப்பு வழக்கை விரைவாக முடிக்க வலியுறுத்தி தஞ்சையில் கருப்பு சட்டை அணிந்து முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் அகமதுஹாஜா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஜபருல்லாக், முகமதுஇலியாஸ், முகமதுசெல்லப்பா, முகமதுசலீம், அப்துல்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஷேக்மைதீன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் ஜெய்னுலாப்தீன், மாநில அமைப்பு செயலாளர் சரவணபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பாபர்மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன பிறகும் மசூதி இடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி, உமாபாரதி உள்ளிட்டவர்கள் கண்டிக்கப்படாததை கண்டிக்கிறோம். பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும். பாபர்மசூதி இடப்பிரச்சினையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும்.
பா.ஜ.க. ஆட்சியில் மதசார்பின்மையை வலியுறுத்தி பேசி வந்த நாராயண்டப்லோகர், கோவிந்த்பன்சாரே, கல்புர்கி, கவுரிலங்கேஷ் ஆகியோரின் படுகொலையை கண்டிப்பதுடன், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் அப்பாவி முஸ்லிம்கள், ஆதிதிராவிடர் இன மக்களை படகொலை செய்த சமூகவிரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் நிர்வாகிகள் பவாஸ்கான், ராஜ்முகமது மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் ரியாஸ்அகமது நன்றி கூறினார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story