மும்ரா– திவா இடையே சென்ற சரக்கு ரெயிலின் பெட்டிகள் கழண்டு ஓடி தடம்புரண்டது சேவை பாதிப்பு
மும்ரா– திவா இடையே சென்ற சரக்கு ரெயிலின் பெட்டிகள் கழண்டு ஓடி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மும்பை,
மும்ரா– திவா இடையே சென்ற சரக்கு ரெயிலின் பெட்டிகள் கழண்டு ஓடி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டு, பயணிகள் அவதியடைந்தனர்.
சரக்கு ரெயில் தடம் புரண்டதுமும்பையில் இருந்து நேற்று மாலை சரக்கு ரெயில் ஒன்று பன்வெல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் மும்ரா– திவா இடையே சென்று கொண்டிருந்த போது இரண்டு பெட்டிகளின் இணைப்பு திடீரென உடைந்தது.
இதன் காரணமாக அந்த சரக்கு ரெயில் பெட்டிகள் கழண்டு தனித்தனியாக ஓடின. இதில் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது பயங்கர சத்தம்கேட்டது.
இதை கவனித்த சரக்கு ரெயில் கார்டு உடனே என்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து உடனடியாக அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.
ரெயில் சேவை பாதிப்புதடம்புரண்ட சரக்கு ரெயில் பெட்டி அருகில் மெயின் வழித்தடத்தில் உள்ள விரைவு தண்டவாளத்தை இடித்து தள்ளியபடி நின்று கொண்டிருந்தது. இதன் காரணமாக அந்த வழியாக வந்த விரைவு ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
பின்னர் அந்த வழியாக வந்த மற்ற விரைவு ரெயில்கள் ஸ்லோ வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன. பெட்டிகள் தனித்தனியாக கழன்று ஓடி சரக்கு ரெயில் தடம்புரண்டது பற்றி அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். தடம்புரண்ட சரக்கு ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் தூக்கிநிறுத்தும் பணிகள் நடந்தன. மாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.