குஜராத் தேர்தல் பிரசாரம் ராகுல்காந்தியை திறமையான தலைவராக மாற்றிவிட்டது சிவசேனா சொல்கிறது
குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரம் ராகுல்காந்தியை திறமைவாய்ந்த தலைவராக மாற்றிவிட்டதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
மும்பை,
குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரம் ராகுல்காந்தியை திறமைவாய்ந்த தலைவராக மாற்றிவிட்டதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தல்குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி, முதல்கட்ட வாக்குப்பதிவு வருகிற 9–ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி குஜராத்தில் முகாமிட்டு, அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இடையிடையே, கோவில்களுக்கும் சென்று அவர் வழிபாடு நடத்தினார்.
இதனை மேற்கோள்காட்டி, பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ‘சாம்னா’ பத்திரிகையில் நேற்று தலையங்கம் வெளியானது. அதில் கூறி இருப்பதாவது:–
பாதையை ஏற்படுத்துங்கள்பா.ஜனதாவால் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என்று கூறப்படுகிற இந்த தேர்தல் (குஜராத்), ராகுல்காந்தியை திறமையான தலைவராக மாற்றிவிட்டது. பிரதமர் மோடியை சோர்வடைய செய்துவிட்டது. ராகுல்காந்தி இனிமேல் ‘பப்பு’ இல்லை என்பதை தேர்தல்கள் நிரூபித்து காட்டிவிட்டன. பா.ஜனதா பெரிய மனதுடன் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாடு முழுவதும் காங்கிரசின் நிலைமை மோசமாக இருக்கிறது. பா.ஜனதா தனக்காக உருவாக்கி இருக்கும் அரசியல் மாயையை தகர்த்து, ராகுல்காந்தி அவருக்காக ஒரு பாதையை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். குஜராத்தில் ராகுல்காந்தி கோவில்களுக்கு சென்று சாமி தரிசனத்தில் ஈடுபடுவதால் அவர் மீது பா.ஜனதாவுக்கு கோபம் ஏற்பட்டிருக்கிறது.
இந்துத்வாவுக்கான வெற்றிகோபப்படுவதை தவிர்த்து, ராகுல்காந்தி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வரவேற்பு தெரிவியுங்கள். ராகுல்காந்தி கோவில்களுக்கு செல்வது இந்துத்வாவுக்கு கிடைத்த வெற்றி. போலி மதச்சார்பின்மையில் இருந்து விடுபட்டு, இந்துத்வாவை நோக்கி அவர் கட்சியை வழிநடத்தினால், அதனை சங் வரவேற்கட்டும்.
ராகுல்காந்தியை முகலாய மன்னர் அவுரங்கசீப்புடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி கிண்டல் செய்கிறார். பிரதமர் மோடி ராகுல்காந்தியை தனது எதிராளியாக கருதுவதற்கும், ராகுல்காந்தி திறமைவாய்ந்த தலைவராக மாறிவிட்டார் என்பதற்கும் இந்த ஒப்பீடு ஆதாரமாக திகழ்கிறது.
இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.