விசுவாசத்திற்குக் கிடைத்த மரியாதை
டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரெயில் நிலைய வாசலில், வெண்கலத்தால் ஆன நாய் சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த சிலை அருகே வந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரெயில் நிலைய வாசலில், வெண்கலத்தால் ஆன நாய் சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த சிலை அருகே வந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். ‘ஹச்சிகோ’ என்ற அந்த நாயின் கதையைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். அந்தக் கதைதான் என்ன?...
1923–ம் ஆண்டு தனியாக நின்று கொண்டிருந்த ஹச்சிகோவை, பேராசிரியர் யுனோ என்பவர் எடுத்து வளர்த்தார். மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டது ஹச்சிகோ. யுனோ மீது அளவற்ற அன்பும் வைத்திருந்தது. தினமும் பணிக்கு செல்லும் அவரை காலையில், ஷிபுயா ரெயில் நிலையம் வரை சென்று வழியனுப்பும். மாலை அவர் திரும்பு நேரம் அவருக்காக ரெயில் நிலையத்தில் காத்திருக்கும். ஒருநாள் யுனோ திரும்பி வரவே இல்லை. அவருக்குத் திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.
ஆனால் அடுத்த நாள், அதற்கு மறுநாள் என்று தொடர்ச்சியாக 9 ஆண்டுகள், தினமும் ரெயில் நிலையத்துக்குச் சென்று, தன்னுடைய எஜமானருக்காகக் காத்திருந்தது ஹச்சிகோ. இந்த விஷயம் ஊடகங்கள் மூலம் ஜப்பான் முழுவதும் பரவியது. நாயின் அன்பைக் கண்டு கண்கலங்காத ஜப்பானியர்களே இல்லை. ஹச்சிகோவின் விசுவாசத்தை பாராட்டும் விதமாகத் தான், ஷிபுயா ரெயில் நிலையத்தில் அதற்கு சிலை வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமா? பள்ளிகளில் குழந்தைகளிடம் ஹச்சிகோவின் விசுவாசத்தைப் பாடமாகச் சொல்லித் தந்தனர். சிலை வைத்து ஓராண்டில் ஹச்சிகோ மரணம் அடைந்தது. 1948–ம் ஆண்டு அந்த சிலையை வெண்கலச் சிலையாக மாற்றி மீண்டும் நிறுவினர். ஹச்சிகோ உலகை விட்டுச் சென்று 80 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் ஜப்பானிய மக்களிடம் ஹச்சிகோவின் செல்வாக்கு குறையவே இல்லை.

Related Tags :
Next Story