மணப்பாறை அருகே விபத்தில் பலியான 10 பேர்களின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு
மணப்பாறை அருகே விபத்தில் பலியான 10 பேர்களின் உடல்களும் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த கோர விபத்தில் பலியான 10 பேர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து தகவலறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் நேற்று காலை மருத்துவமனைக்கு வந்தனர்.
அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. முன்னதாக விபத்து நடந்த பகுதிக்கு நள்ளிரவில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.வரதராஜ், டி.ஐ.ஜி. பவானீஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அதிகாலை வந்த கலெக்டர் ராஜாமணி விபத்தில் பலியானவர்களுடைய உறவினர்களுக்கு ஆறுதல் கூறியும், படுகாயமடைந்து சிகிச்சை பெறுபவர்களிடம் நலமும் விசாரித்தார். பின்னர் பிரேத பரிசோதனையை விரைந்து முடிக்குமாறு டாக்டர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து 10 பேர்களின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மதியம் 12 மணியளவில் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் 5 அமரர் ஊர்தி வாகனங்களில் 10 பேர்களின் உடல்களும் ஏற்றப்பட்டு, மதியம் 12.40 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றன.
முன்னதாக விபத்தில் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை பெற உறவினர்களை அலைக்கழிக்க கூடாது என்பதற்காக கலெக்டர் ராஜாமணி உத்தரவின் பேரில், பொன்னம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் ஹமீது தலைமையில், அலுவலர்கள் அரசு மருத்துவமனையில் வைத்து உறவினர்களிடம் இறப்பு சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்கினர்.

Related Tags :
Next Story