தமிழகத்தில் சட்டத்திற்கு உட்பட்டுதான் கவர்னர் ஆய்வு செய்து வருகிறார் இல.கணேசன் எம்.பி. பேட்டி
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்டத்திற்கு உட்பட்டு தான் ஆய்வு செய்து வருகிறார் என புதுக்கோட்டையில் இல.கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியில் கூறினார்.
புதுக்கோட்டை,
புதுகை தேசிய பேரவை சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழா சிறப்பு கருத்தரங்கம் புதுக்கோட்டை டவுன்ஹாலில் நேற்று நடைபெற்றது. இதற்கு புரட்சிக் கவிதாசன் தலைமை தாங்கினார். சுப்பையா முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் இல.கணேசன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக இல.கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்டத்திற்கு உட்பட்டு தான் ஆய்வு செய்து வருகிறார். இது குறித்து தமிழக அரசோ அல்லது அமைச்சர்களோ விமர்சனம் செய்யவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக ஆட்சிக்கு வர துடித்து கொண்டு உள்ள தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆட்சிக்கே வரமுடியாத நிலையில் இருக்கும் தி.மு.க கவர்னர் ஆய்வு குறித்து விமர்சனம் செய்வது ஏன்?. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மக்களுக்கு நன்கு அறிமுகமானவரை தான் பா.ஜ.க வேட்பாளராக களம் இறக்கி உள்ளது.
அ.தி.மு.க., தி.மு.க.விற்கு வாக்களித்த மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை விரும்புபவர்கள் பா.ஜ.க.விற்கு வாக்களிப்பார்கள். அது எங்களுக்கு சாதகமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story