மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் இந்திய மீனவர் சங்கத்தினர் கோரிக்கை
‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அரசுக்கு இந்திய மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,
அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கத்தினர், இந்திய மீனவர் சங்கத்தினருடன் இணைந்து நேற்று சென்னையில் பத்திரிகையாளரை சந்தித்தனர்.
அப்போது இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் தயாளன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 30-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ‘ஒகி’ புயலால் மாவட்டம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் அடித்து 8 நாட்களுக்கு மேலாக ஆகியும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை வழங்கப்படவில்லை.
பேரிடர்
பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் வழங்கவில்லை. மேலும் புயல் தாக்கிய நேரத்தில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
ஆகவே ‘ஒகி’ புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து உடனே ராணுவத்தை அனுப்பி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரபடுத்தி, புயலின் போது கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக எங்களது சங்கத்தினர் மத்திய மீன்வளத்துறை மந்திரியையும் நிதி மந்திரியையும் விரைவில் சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story