ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் திவாகரன் பேட்டி
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறினார்.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிகலாவின் சகோதரர் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு தினகரனுக்கு போலீஸ் அனுமதிக்கவில்லை என்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னர் அவர் தொடர்ந்து பிரசாரம் செய்வார். ஆர்.கே.நகர் தொகுதியில் 60 சதவீதம் பேர் மத்திய, மாநில அரசுகளின் மேல் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ஆதரவு தினகரனுக்கு உள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கலின் போது விஷாலின் மனு குறித்து உள்ள குழப்பங்களுக்கு தேர்தல் அதிகாரி தான் காரணம். ஆரம்பமே சொதப்பல் என்றால் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டியதுதான். எங்களுக்கு யார் ஆதரவும் தேவையில்லை மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள். நாங்கள் வெற்றி பெறுவோம்.
அண்மையில் வீசிய புயலின் போது எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் இந்த அரசு செய்யவில்லை. புயல் வீசிய பின்னர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளும் நடைபெறவில்லை. எனக்கு வேண்டியவர்கள் நாகை கடல்வழியாக மீன்பிடிக்க சென்றவர்கள் இது வரை திரும்பவி்ல்லை. 18 பேர் சென்று 3 பேர் திரும்பி உள்ளனர். மீதமுள்ள 15 பேர் குறித்த இந்த அரசு எவ்வித தகவலும் தர மறுக்கிறார்கள். செயல்படாத அரசாக இந்த அரசு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story