உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி சமையலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி சமையலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்; பஸ் சிறைபிடிப்பு
பெத்தநாயக்கன்பாளையம்,
பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா பெரியகல்வராயன்மலை சூலாங்குறிச்சி கிராமத்தில் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சமையலராக பணியாற்றி வரும் பாக்கியராஜ் என்பவர், பள்ளியில் இருந்து 30 கிலோ அரிசியை சூலாங்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் தெரிந்ததும் பொதுமக்கள் பலர் நேற்று காலை உண்டு உறைவிட பள்ளி முன்பு திரண்டு வந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் கிணத்தூரில் இருந்து கருமந்துறை செல்லும் அரசு பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஏத்தாப்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரிடம் அவர்கள், பள்ளியில் உள்ள அரிசியை விற்கும் சமையலர் பாக்கியராஜ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் பாக்கியராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story