செல்போன் திருட்டு பிரச்சினை: தொழிலாளியை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை
செல்போன் திருட்டு பிரச்சினை தொடர்பாக தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஈரோடு,
ஈரோடு பெரியசேமூர் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன். இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 39). தொழிலாளி. இவர் தனது தாயார் ராமாத்தாள் என்பவருடன் வசித்து வந்தார்.
கடந்த 10-3-2013 அன்று முத்துக்குமார் அவருடைய நண்பர்கள் முகமது ரபீக், முத்து மற்றும் முத்தான் ஆகியோருடன் கனிராவுத்தர்குளம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபாரில் மது குடிக்க சென்றார்.
அவர்கள் 4 பேரும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே மது குடித்தனர். அப்போது பக்கத்து மேஜையையொட்டி பெரியசேமூர் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த மன்னாத்தான் என்பவருடைய மகன் வெள்ளியங்கிரி (28), வைராபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பெருமாள் என்பவருடைய மகன் மாயி என்கிற மாயக்கண்ணன் (39), எல்லப்பாளையம் வாய்க்கால் கரை பகுதியை சேர்ந்த முத்து என்கிற பச்சமுத்து ஆகியோர் மது குடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது வெள்ளியங்கிரி நைசாக முகமது ரபீக்கின் செல்போனை எடுத்தார். இதை முத்துக்குமார் பார்த்தார். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் வெள்ளியங்கிரி செல்போனை அருகில் இருந்த மாயி என்கிற மாயக்கண்ணனிடம் கொடுக்க, அவர் எதுவும் தெரியாததுபோன்று செல்போனுடன் பாரில் இருந்து வெளியே சென்றார்.
அதைப்பார்த்ததும் முகமது ரபீக்கிடம் முத்துக்குமார் கூறினார். உடனடியாக முத்துக்குமார் உள்ளிட்ட நண்பர்கள் வெள்ளியங்கிரி மற்றும் நண்பர்களிடம் திருடிய செல்போனை திரும்பத்தரும்படி கேட்டனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனினும் முத்துக்குமார் உறுதியாக தான் பார்த்ததை கூறியதால் வெள்ளியங்கிரி எடுத்த செல்போனை மீண்டும் கொண்டுவந்து முகமது ரபீக்கிடம் கொடுத்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த பிரச்சினையில் செல்போன் திருடியதை முத்துக்குமார் காட்டிக்கொடுத்து விட்டதால் அவர் மீது வெள்ளியங்கிரி, மாயி என்கிற மாயக்கண்ணன் ஆகியோர் கடுமையான கோபத்தில் இருந்தனர். அவரை எப்படியாவது கொலை செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டனர். பின்னர் அன்றைய தினம் இரவு 9.30 மணி அளவில் முத்துக்குமாரின் வீட்டுக்கு வந்த அவர்கள் முத்துக்குமாரை அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத கூழையன்காட்டு தோட்டம் பகுதிக்கு அழைத்துச்சென்றார்கள். அங்கு ஒருவர் முத்துக்குமாரை பிடித்து வைத்துக்கொள்ள, 2 பேர் கல்லால் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயக்கம் அடைந்தார்.
அவர் இறந்து விட்டதாக நினைத்து தப்பி ஓடினார்கள். வீட்டில் இருந்து வெளியே சென்ற மகன் வீடு திரும்பாததால் தேடி வந்த ராமாத்தாள், ரத்த வெள்ளத்தில் முத்துக்குமார் கிடப்பதை பார்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் 13-3-2013 அன்று பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து வெள்ளியங்கிரி, மாயி என்கிற மாயக்கண்ணன், முத்து என்கிற பச்சமுத்து ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு முதலாம் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை நீதிபதி பெஞ்சமின் ஜோசப் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் முத்துக்குமாரை கடத்திச்சென்று கொலை செய்த குற்றத்துக்காக வெள்ளியங்கிரி, மாயி என்கிற மாயக்கண்ணன் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். அதுமட்டுமின்றி மாயி என்கிற மாயக்கண்ணனுக்கு ரூ.4 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் கூறி உள்ளார்.
முத்து என்கிற பச்சமுத்துவின் மீதான குற்றம் சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் துரைசக்திவேல் ஆஜர் ஆனார்.

Related Tags :
Next Story