சென்னை எழும்பூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வங்கி அதிகாரி பலி போலீசார் விசாரணை


சென்னை எழும்பூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வங்கி அதிகாரி பலி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 Dec 2017 3:30 AM IST (Updated: 9 Dec 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வங்கி அதிகாரி பலியானார்.

சென்னை, 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா, சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் ஜெகதீஷ்குமார் (வயது 32). தனியார் வங்கியில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்கு மார்ஷல் சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஜெகதீஷ்குமாரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெகதீஷ்குமாரை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும், அதன் ஓட்டுனரையும் தேடி வருகின்றனர். 

Next Story