பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2017 4:30 AM IST (Updated: 9 Dec 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆவடி-பட்டாபிராம் ரெயில் நிலையம் இடையேயும், வண்ணாரப்பேட்டை-பேசின்பாலம் ரெயில் நிலையம் இடையேயும் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவைகளில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காலை 10.25, 11.35 மற்றும் மதியம் 12.20, 1.25 மணிக்கு புறப்படும் மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையேயும், பகல் 12.40 மணிக்கு புறப்படும் மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையேயும், காலை 11.20, 12.55, 1.35 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையேயும் ரத்து செய்யப்படுகிறது.

காலை 11.15 மணிக்கு புறப்படும் சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டியில் நிறுத்தப்படும். மதியம் 1.15 மணிக்கு புறப்படும் சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் மின்சார ரெயில் சூலூர்பேட்டை-மீஞ்சூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்

சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.10 மணிக்கு ஆவடிக்கும், மதியம் 12.10 மணிக்கு திருத்தணிக்கும், மதியம் 1.05 மணிக்கு திருவள்ளூருக்கும், மதியம் 12.25 மணிக்கு அரக்கோணத்துக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரைக்கு பதிலாக மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

அதேபோல் திருத்தணியில் இருந்து காலை 8.50 மணிக்கும், திருவள்ளூரில் இருந்து காலை 11.05 மணிக்கும், ஆவடியில் இருந்து மதியம் 12.10 மணிக்கும், கடம்பத்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கும் புறப்படும் ரெயில்கள் கடற்கரைக்கு பதில் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்திற்கு செல்லும்.

வேளச்சேரி

9, 10, 12, 13-ந்தேதிகளில் திருவள்ளூரில் இருந்து காலை 11.05 மணிக்கும், ஆவடியில் இருந்து 12.10 மணிக்கும், கடம்பத்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரைக்கு பதில் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

அதேபோல் வேளச்சேரியில் இருந்து ஆவடிக்கு காலை 10.15 மணிக்கும், திருத்தணிக்கு காலை 11.20 மணிக்கும், திருவள்ளூருக்கு மதியம் 12.15 மணிக்கும், அரக்கோணத்திற்கு மதியம் 1.35 மணிக்கும், சூலூர்பேட்டைக்கு மதியம் 1.55 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story