ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஏரி நிரம்பி ஊருக்குள் புகுந்தது, பொதுமக்கள் அவதி
ஆம்பூர் அருகே ஏரி நிரம்பி ஊருக்குள் புகுந்ததால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே உள்ள வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி, சின்ன ஏரி என 2 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளுக்கு தமிழக - ஆந்திர வனப்பகுதியில் பெய்யும் மழையினால் பொன்னப்பல்லி, அரங்கல்துருகம், ராள்ளகொத்தூர் ஆகிய கானாறுகளின் மூலம் தண்ணீர் வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக வெங்கடசமுத்திரம் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. உபரிநீர் வெளியேறும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளதாலும், கால்வாய் இருக்கும் சுவடே தெரியாமல் போன காரணத்தாலும் துத்திப்பட்டு, பெரியவரிகம், தேவலாபுரம் ஊராட்சியில் உள்ள தோல் மற்றும் ஷூ தொழிற்சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் - வெங்கடசமுத்திரம் சாலை துண்டிக்கப்பட்டு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. ஆனால் திருப்பி விடப்பட்ட தண்ணீர் ஆற்றுக்குள் செல்லாமல் துத்திப்பட்டு, பெரியவரிகம் ஊராட்சிகளின் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் குளம்போல் தேங்கியும், சாலையின் நடுவே ஆறாகவும் ஓடுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லவும், தேங்கியுள்ள தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தி ஆகி பல்வேறு நோய் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியவரிகம், துத்திப்பட்டு ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் வெங்கடசமுத்திரம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் குதிரைகால்வாய் என அழைக்கப்படும் கால்வாய் மூலம் பாலாற்றுக்கு சென்றுவிடும். இந்த குதிரை கால்வாய் இரண்டாக பிரிந்து ஒன்று துத்திப்பட்டு ஊராட்சி வழியாகவும், மற்றொன்று பெரியவரிகம் ஊராட்சி வழியாகவும் பாலாற்று பகுதிக்கு சென்றுவிடும். தற்போது இந்த குதிரை கால்வாய் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும், வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாலும் உபரிநீர் ஆற்றுக்கு செல்லாமல் ஆங்காங்கே தேங்கியும், தெருக்களிலும் ஓடுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் வருவாய்துறைக்கும், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதனை பார்வையிட வந்த அதிகாரிகள் நாங்கள் என்ன செய்வது? என்று அலட்சியமாக பதில் அளித்துவிட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குதிரை கால்வாயை 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் தூர்வாரியதாகவும், அதற்கு பல லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும், வேலையே செய்யாமல் பணம் சுருட்டப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள குதிரை கால்வாயை மீட்டு அதன் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story