தலையில் கல்லைப்போட்டு இளம்பெண் படுகொலை கிணற்றில் குதித்து தந்தை தற்கொலை
ஆற்காடு அருகே தலையில் கல்லைப்போட்டு இளம்பெண்ணை கொன்றுவிட்டு, தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்காடு,
வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள அரப்பாக்கம் மசூதி தெருவை சேர்ந்தவர் நாசர் (வயது 50), பீடித் தொழிலாளி. இவருக்கு முபைனா, யாஸ்மின் (22), ஜாஸ்மின் என்று 3 மகள்கள் உண்டு. நாசரின் மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து போனார்.
நாசரின் மகள் முபைனா திருமணமாகி பின்னர் உடல்நலம்பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அவருடைய கணவரும் விபத்தில் பலியாகிவிட்டார். 3-வது மகள் ஜாஸ்மின் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் நாசர், தனது 2-வது மகள் யாஸ்மினுடன் வசித்துவந்தார்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நாசரும் ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டார். அதில் இருந்து அவருக்கு சரியாக பேச்சுவரவில்லை. இதன்காரணமாக நாசர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் யாஸ்மினுக்கு திருமணம் செய்ய அவருடைய உறவினர்கள் ஏற்பாடுகள் செய்தனர். இதற்காக மேல்விஷாரத்தில் மாப்பிள்ளை பார்த்து அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து 100 அடிதூரத்தில் வாழைத்தோப்பில் உள்ள விவசாய கிணற்றில் நாசர் பிணமாக கிடப்பதை அப்பகுதியினர் பார்த்துள்ளனர். இதுபற்றி அவரது மகள் யாஸ்மினிடம் தெரிவிக்க வீட்டிற்கு சென்றுள்ளனர். யாஸ்மினை அழைத்தும் வெளியே வராததால் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் யாஸ்மின் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது நாசர் பிணமாக கிடந்த கிணற்றின் கரையில் ரத்தம் படிந்த ஒரு லுங்கி, அவர் அணிந்திருந்த காலணி கிடந்தது. அதேபோன்று கொலைசெய்யப்பட்ட யாஸ்மின் அருகில் ரத்தம் படிந்த வீடுகட்டுவதற்கு பயன்படுத்தும் கல் ஒன்றும் கிடந்தது.
உடனடியாக ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சென்று கிணற்றில் பிணமாக கிடந்த நாசரின் உடலை மீட்டு வெளியே தூக்கி கிணற்றின் அருகில் வைத்திருந்தனர். அவருடைய உடலில் எந்தவித காயமும் இல்லை. எனவே அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
வேலூரில் இருந்து மோப்ப நாய் சன்னி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து ஓடி கிணற்றை சுற்றிவந்து நாசர் உடலின் அருகே சென்று நின்றுவிட்டது. இதனால் நாசர், தனது மகள் யாஸ்மினை கொலை செய்துவிட்டு, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தை - மகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story