கடலூர் கோர்ட்டில் உளவுப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்
வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழந்த வழக்கில் மத்திய உளவுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
கடலூர்,
புவனகிரி மேலமணக் குடியை சேர்ந்த மணி மகள் நதியா(24). இவருக்கும் பு.மணவெளியை சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 6 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 7-6-2009 அன்று வீட்டில் நதியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு இருப்பதாகவும் நதியாவின் தந்தை மணி புவனகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சுதாகர், அவரது தந்தை ஜெயராமன், தாயார் ஜெயக்கொடி மற்றும் சுதா, ஹேமாவதி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் நதியாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டார். இதில் வரதட்சணை கொடுமையின் காரணமாக நதியா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சுதாகர் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது கடலூர் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
நேற்று இந்த வழக்கு நீதிபதி செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பவம் நடந்தபோது சிதம்பரத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த நரேந்திரன் நாயர் நேற்று கடலூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். நரேந்திரன் நாயர் தற்போது திருவனந்தபுரத்தில் மத்திய உளவுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார்.

Related Tags :
Next Story